தகவல் தொழில்நுட்பத்தில் தமிழின் பயன்பாடு மிக குறைவாகவே உள்ளது. மேற்கத்திய அல்லது சீன, சப்பானியத்தை தாய்மொழியாக கொண்ட மக்களை போல தமிழ் மொழி பேசும் மக்களும் இணைய மற்றும் தகவல் தொழில்நுட்ப உலகில் தமிழை பயன்படுத்த போதிய கருவிகள் மற்றும் உலவிகள் உருவாக்கி கொண்டாலொழிய வேறு வழியில்லை. இத்தகவல் தொழில்நுட்ப உலகினில் அனுதினமும் தமிழ் படிக்கும் வாய்ப்பு மிகவும் அருகி வருகிறது. ஏனெனில் நாம் அன்றாடம் செய்தி மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் தகவல்களை பயிலும் விதம் தமிழை உபயோகிக்க வாய்ப்பு அளிப்பதில்லை. எடுத்துக்காட்டாக முகநூல் மற்றும் ட்விட்டர் உளவுத்தளங்களில் தமிழை உபயோக மொழியாக கொண்டவர்கள் மிக அரிது. முழுக்க முழுக்க தமிழை மட்டுமே பயன்படுத்தும் இணையதளத்தினை உருவாக்கும் முயற்சி இது.